என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ முகாம்"
- சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
- 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை:
வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
- டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
- கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தொழிலாளர் காலனியில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டம் 1 கோடி பேரை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் 2 கோடி பேர் வரையில் பயனடைந்துள்ளனர். இதுவரை 1 கோடியே 96 லட்சத்து 77,577 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐ.நா.சபையின் பாராட்டையும் பெற்றுள்ளோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரையில் 7 பேர் மட்டுமே பலியாகி இருக்கிறார்கள்.
தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு விடும். எனவே பொதுமக்கள் இதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பு மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை இன்று 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
- வெள்ளச் சூழலைப் பொறுத்து மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு.
காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறை மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, 37 மருத்துவ முகாம்கள் உடனடியாக அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த முகாம்களின் எண்ணிக்கை இன்று 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெள்ளச் சூழலைப் பொறுத்து மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், இந்த மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு போன்ற புகார்கள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி நாமக்கல், ஈரோடு, கடலூர், கரூர், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய இடங்களில் 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதிகளில் தயார் நிலையில் உள்ள துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைகளுடன் போதுமான அளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் உள்ளன.
பொதுமக்கள் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கவும், சத்தான உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைகள் வெள்ள நீர் அல்லது அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். டெங்கு, மலேரியாவை தடுக்க கொசுவலை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், மீட்புப் பணியாளர்கள் அறிவுறுத்தும் வரை மக்கள் தற்காலிக தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மழைக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
- மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை அபித் காலனியில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சைதாப்பேட்டை அபித் காலனியில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமார் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 11) என்பவர் நோய்த் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து,
சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதனை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி மக்களுக்கு பிளிச்சீங் பவுடர், ஓ.ஆர்.எஸ் கரைசல், ஆகியவற்றினையும் இப்பகுதி மக்களிடம் வழங்கி, வீட்டின் குடிநீர்த் தொட்டியினை சுத்தம் செய்திடவும், சுற்றுப்புறப் பகுதியினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.
இப்பகுதியில் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதையும், லைசால், பிளீச்சிங் பவுடர் (Lysol, Bleaching powder) கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதையும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பகுதியில் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இம்மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவலர் ஆஷாலதா, சென்னைக் குடிநீர் வாரியம், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
- எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத் தாயம் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
- அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
சென்னை :
சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை செய்தார்.
எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத் தாயம் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
- தூத்துக்குடி நகரம் முழுவதும் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்தது.
- சமையலறை முழுவதும் சேதமடைந்து விட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி நகரம் முழுவதும் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்தது. மழை ஓய்ந்ததை தொடர்ந்து வெள்ளம் வடிந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.
அதே நேரம் தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்னும் சில இடங்களில் வெள்ளம வடியவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6-வது நாளாக இன்றும், மாவட்டத்தில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேத இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தூத்துக்குடி வந்தார்.
கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ மனையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 190 நடமாடும் மருத்துவம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் மருத்துவர் உள்ளிட்ட 4 பணியாளர்கள் உள்ளனர். நேற்று மட்டும் 2,882 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 67 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர்.
மேலும், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து டாக்டர்கள், செவிலியர்கள் துத்துக்குடி வர இருக்கிறார்கள்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் தாழ்வாக உள்ளதால் இங்கு முதல் நாளில் இருந்தே வெள்ளம் வரத்தொடங்கியது. உடனடியாக இங்குள்ள ஊழியர்களே முதல் தளத்தில் இருந்து நோயாளிகளை மேல் தளத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த சிறிய உபகரணங்களும், மேல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சமையலறை முழுவதும் சேதமடைந்து விட்டது.
மேலும் இதயவியல் துறையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான எந்திரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி பழுதானது. அதனை சரிசெய்து மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சென்னையில் இருந்து நிபுணர்கள் வர உள்ளனர். மாவட்டம் முழுவதும் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்மோட்டார்கள் மூலம் அதனை முற்றிலும் அகற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வெள்ளம் அகற்றப்பட்டு விடும்.
தற்போது அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மருத்துவ முகாம் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுடன் பேசி வருகிறோம். காப்பீடு திட்டம் உள்ள பெரிய மருத்துவமனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடடத்தப்பட உள்ளது.
உயிர் பாதிப்பு இல்லா வகையில் மருத்துவமனை செயல்பாடு சிறப்பாக உள்ளது. மேலும், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பானதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும்.
உயிரிழப்புகளை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் தான் கணக்கெடுத்து வருகிறது. அவர்கள் முறையாக அறிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- 440 பணியாளர்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் மேற்பார்வையில் 55 மருத்துவ குழுவைக் கொண்டு 144 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
நாளை முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து 55 மருத்துவ குழுவினர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 33 மருத்துவ குழுவினர் மற்றும் 440 பணியாளர்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மருத்துவ முகாம்கள்காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
- குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.
சென்னை:
'மிச்சாங்' புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டது.
சென்னை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஜய் உத்தரவின் பேரில் மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு உணவு, பாய், பால், ரொட்டி, ஸ்டவ் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-ந்தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்து வர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத் துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வடசென்னை
46-வது வார்டு: முல்லை நகர், அசோக் பில்லர், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில்.
45-வது வார்டு: பி.பி.ரோடு, கரிமேடு, வியாசர்பாடி, தீயணைப்பு நிலையம் அருகில்.
35-வது வார்டு: கொடுங்கையூர், முத்தமிழ்நகர், பள்ளிவாசல் அருகில்.
72-வது வார்டு: கஸ்தூரிபாய் காலனி, ஏ பிளாக், கன்னிகாபுரம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில்.
75-வது வார்டு: சுப்பு ராயன் 4-வது தெரு.
65-வது வார்டு: முத்து மாரியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் எஸ்.பி.ஐ. அருகில்.
41-வது வார்டு: கருமாரி யம்மன் தெரு, தூய இருதய மெட்ரிகுலேசன் பள்ளி அருகில், கொருக்குப் பேட்டை.
தென்சென்னை
141-வது வார்டு: காமராஜ் காலனி, தி.நகர் பஸ் நிலையம் அருகில்.
133-வது வார்டு: ஆனந்தன் தெரு, முப்பத்தம்மா கோவில் அருகில்.
132-வது வார்டு: ஐந்து விளக்கு, புண்ணியகோடி கல்யாண மண்டபம்.
134-வது வார்டு: பிருந்தா வனத் தெரு, ஹவுசிங் போர்டு அருகில்.
130-வது வார்டு: அம்மன் கோவில் தெரு, கிழக்கு வடபழனி முருகன் கோவில் அருகில்.
135-வது வார்டு: 83-வது தெரு, மேல்புதூர், அசோக்நகர்.
131-வது வார்டு: 61-வது தெரு, அம்மா உணவகம் அருகில், நல்லாங்குப்பம்.
180-வது வார்டு: திருவான்மியூர் இ.சி.ஆர். சாலை, ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.
178-வது வார்டு: தரமணி, தந்தை பெரியார் நகர், தரமணி பஸ் நிலையம் அருகில்.
121-வது வார்டு: கணேசபுரம் அருகில், சிட்டி சென்டர் பின்புறம்.
123-வது வார்டு: லாக்நகர், மந்தவெளி ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.
139-வது வார்டு: பாரதிதாசன் காலனி, ஜாபர்கான்பேட்டை அருகில்.
140-வது வார்டு: சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில்.
120-வது வார்டு: முத்தையா தோட்டம் அருகில்.
மத்திய சென்னை
58, 99, 77-வது வார்டுகள்: ஐயப்ப மைதானம், திரு நாராயணகுரு சாலை, பெரியமேடு, சூளை, சென்னை டவுட்டன் பாலம் அருகில்.
108-வது வார்டு: எம்.எஸ்.நகர், அம்பேத்கர் திடல், மங்களபுரம் போலீஸ் பூத் அருகில், எழும்பூர்.
84, 95-வது வார்டு: திரு வெங்கடய்யா முதல் தெரு, வில்லிவாக்கம்.
98-வது வார்டு: குட்டி யப்பன் தெரு, பம்பிங் ஸ்டே ஷன், அயனாவரம் மன நிலை காப்பகம் அருகில், அயனாவரம், கீழ்ப்பாக்கம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.
- கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
தோவாளை சக்தி மகளிர் டிரஸ்ட் குலசேகரம் மூகாம்பிகை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டாக்டர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடந்த முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.
கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.
கண் மருத்துவர் டாக்டர் குமார் பொது மருத்துவர் டாக்டர் விகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழு பொதுமக்களுக்கு சிசிச்சை அளித்தது.
முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ் ஆசிரியர் சேகர் மற்றும் சக்தி மகளிர் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருத்துவமனை பிஆர்ஓ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.
- நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.
இதற்காக கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து 'ஈஷா அவுட்ரீச்' சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் சென்னை சென்றடைந்தனர்.
இவர்கள் மூன்று மருத்துவ குழுக்களாக இயங்கி, வட மற்றும் தென் சென்னையின் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இது தவிர 3 நடமாடும் மருத்துவ வாகனங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
https://twitter.com/Outreach_Isha/status/1733190433667498209?t=ji4hApdq6xBtaPZPQdv8Jw&s=19
ஈஷா யோக மையம் இதற்கு முன்பு 2004 - இல் ஏற்பட்ட சுனாமி, 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம், கஜா புயல் மற்றும் 2020 - ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களினால் பாதிக்கபட்ட மக்களுக்கு அப்பொழுது தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பிற நிவாரண உதவிகளை பெருமளவில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
- 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை:
'மிச்சாங்' புயல் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து விட்டதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. காயம் அடைந்தவர்களுக்கு 'டெட்டனஸ் டாக்சாய்டு' செலுத்தப்படுகிறது. மேலும் மேல்நிலை தொட்டிகள், சம்புகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கு சுகாதாரத்துறை மூலம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது.
வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற மழை நீர் மற்றும் நோய் கிருமிகளால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
பொதுமக்கள் இந்த சமயத்தில் பாதுகாப்பான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. தொற்று நோய்களை தடுக்க சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
வெள்ளத்தில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. யாருக்காவது காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம் உள்ளிட்ட அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தனியார் டேங்கர் லாரி, திறந்த வெளி குளங்கள், கிணறுகளில் வெள்ள நீர் கலந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றை குடிப்பது பாதுகாப்பானது அல்ல.
சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். இறந்த விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 மாதம் முதல் 15 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முந்தைய நோய் தடுப்பு நிலையை பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் கொடுக்க வேண்டும். இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. எலி காய்ச்சல், காலரா மற்றும் பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மக்கள் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். "டாக்னிகள்" என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையை சாப்பிட்டால் காய்ச்சல், தொற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அனைத்து மருத்துவ முகாம்கள், சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. பொது மக்கள் சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பின்பற்றினால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நல்ல மருது நினைவு தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடந்தது.
- 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் அவரது திருஉருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதில் மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தலைமையில் பகுதி செயலாளர் ஈஸ்வரன், கவுன்சிலர் போஸ் முத் தையா, வட்டக் கழக செயலாளர் பாலா என்ற பால சுப்பிரமணியன் கவுன்சிலர் வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கௌதம் போஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.
இதனைத் தொடர்ந்து 200 பேர் ரத்ததானம் வழங்கினர். பின்னர் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை சிறப்பு முகா மும் நடைபெற்றது. தொடர்ந்து 2000 பேருக்கு அன்னதானத்தை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. முன் னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநகர், புற நகர், பகுதி, வட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்